டில்லி காசியாபாத் அருகே, ரயில்மோதி; ரயில்வே"கேங் மேன்கள்' நான்கு பேர் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டில்லியில் இருந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று டேராடூனுக்கு புறப்பட்டது. காலை 11.30 மணியளவில் காசியாபாத் - சாகியாபாத் இடையே சென்று கொண்டிருந்தது.
அந்தப் பாதையில், ரயில்வே கேங்மேன்கள் நான்கு பேரும், தண்டவாள பராமரிப்பு ஆய்வாளர் ஒருவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை கவனிக்காத அவர்கள், ரயிலில் அடிபட்டு இறந்தனர். இந்த விபத்தால், ஆத்திரமடைந்த மற்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கட்டைகளை வைத்து போக்குவரத்தை நிறுத்தியதோடு, மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், சில மணி நேரம் ரயில் போக்குவரத்து தடைபட்டது. மோதிய ரயிலின் டிரைவரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தடைகள் அகற்றி ரயில் போக்குவரத்தை சீர் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment