போக்குவரத்து விதிமீறல்களுக்காக, சென்னை நகரில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக் கப்படுகிறது.ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காதது, அதிக வேகம், லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த அபராதம் வசூலிக்கப்படுகிறது.சென்னை அண்ணா சாலையில், மன்றோ சிலை முதல் ஜெமினி மேம்பாலம் வரை மாதிரி சாலையாக அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இதன் பயனாக, சென்னையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், 10 லட்சம் ரூபாய் அளவிற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட் கள் என்பதால், அன்றைய தினம் போலீசாரின் கெடுபிடி அதிகம் இருக்காது என கருதி வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் சென்றுள்ளனர்.இதனால், அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment