எஸ்.ஐ.,1,000 கான்ஸ்டபிள் 9,00விரைவில் தேர்வு டி.ஜி.பி.,ஜெயின் தகவல்

தமிழக காவல்துறையில் ஏற் பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை தீர்க்க, அடுத்த ஆண்டு ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒன்பதாயிரம் கான்ஸ்டபிள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர், என,கோவையில் டி.ஜி.பி.,ஜெயின் கூறினார்.


கோவை ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க் அருகே 25 லட்சம் ரூபாய் செலவில், தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி.,அலுவலகம் கட்டப்பட்டுள் ளது. புதிய கட்டடத்தை டி.ஜி.பி., ஜெயின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, ஐ.ஜி.,பிரமோத்குமார், டி.ஐ.ஜி.,பாலநாகதேவி த்கியோர் பங்கேற்றனர்.


கட்டத்தை திறந்து வைத்தபின், டி.ஜி.பி.,ஜெயின் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது. கடந்த மாதம் எடுத்த சர்வேயின்படி, இந்தியாவில் மிகக்குறைந்த அளவு குற்றம் நடக்கும் மாநிலம் கேரளா, இரண்டாவது இடத்தை தமிழகம் பெற்றுள் ளது. தமிழக கடலோர பாதுகாப்பு பணியில் 12 போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. நடப்பு ஆண்டில் இது 24 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.


கடலோர ரோந்து பணி போலீசாருக்கு ஆறு ரோந்து படகுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவித்தபடி, படகுகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன விபத்து அதிகரித்துள்ளது, உண்மை தான். மக்கள் நெரிசலும், வாகனங்கள் அதிகரிப்பும் விபத் துக்கு காரணம்.


இருந்தாலும் விபத்தை குறைத்து, உயிர்பலியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் தான் முதன்முதலாக, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கம்யூனிட்டி போலீஸ் துவக்கப்பட்டது. நக்சல் நடமாட்டம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட வன வளம் மிக்க மாவட்டங்களை கண்காணிக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.


போலீஸ்- பொதுமக்கள் ஒற்றுமை காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளன. இது தமிழகம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நக்சல் நடமாட்டம் இல்லை. இருந்தாலும், சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அதிரடிப்படையினர் ரோந்து செல்கின்றனர். தமிழக காடுகளில் சந்தன மரக் கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வனத் துறை அதிகாரிகள் புகார் கொடுத்ததும் உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


ஏற்கனவே, மரக் கடத்தலில் ஈடுபட்ட பலர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் உள்ள போலீஸ் பற்றாக்குறை தீர்க்க, தற்போது நான்காயிரம் போலீசார் தேர்வாகியுள்ளனர். தற்போது இவர்கள் பயிற்சியில் உள்ளனர்.


அடுத்த ஆண்டு ஆயிரம் சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒன்பதாயிரம் போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடக்கிறது. சைபர் க்ரைம் வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் தனி அமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும், அனைத்து ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் சைபர் க்ரைம் விசாரணை குறித்த பயிற்சி அளிக்கப்படும், என்றார்.


காங்கயம் பெண் போலீஸ் ஜெயமணியை கற்பழித்து கொலை செய்த வழக்கில், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த லாரி டிரை வர் ஜெய்சங்கர் கைது செய்யப் பட்டார்.குற்றவாளியை கண்டு பிடிக்க கூடுதல் எஸ்.பி.,ஜெயபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இக்குழுவைச் சேர்ந்த டி.எஸ்.பி.,க்கள் காமராஜ், ரங்காத் தாள், ராஜா, மாடசாமி குழுவினர் 37 பேரை பாராட்டி, டி.ஜி.பி.,ஜெயின் ஊக்கத் தொகை வழங்கினார்.

0 comments: