கத்தாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 35 ஜார்க்கண்ட் இளைஞர் களிடம் பணம், பாஸ் போர்ட் வாங்கிக்கொண்டு சென்னையைச் சேர்ந்த இருவர் மோசடி செய்துள் ளனர்.
போலீசில் புகார் அளித் துள்ள ஜார்க்கண்ட் இளைஞர்கள், தங்களது பணம், பாஸ்போர்டை திரும்பப் பெற சென்னையில் முகாமிட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த டிராவல் நிறுவன ஏஜன்ட் தனஞ்செய் உபாத்தியா, ஜார்க்கண்டில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் சந்தோஷ் என்பவரை தொடர்பு கொண்டு, கத்தாரில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக ஒரு ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் கமிஷனாகத் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு ஒப்புக் கொண்டு, சந்தோஷ் உட்பட 35 ஜார்க்கண்ட் இளைஞர்கள், தனஞ்செய் உபாத்தியாவிடம் கத்தாரில் வேலை வாங்கித் தருமாறு கோரினர். கமிஷன் தொகையில் 10 ஆயிரம் ரூபாயை முதலில் தர வேண்டும் என்றும், மீதித்தொகை வேலை கிடைத்த பிறகு சம்பளத்திலிருந்து தர வேண்டும் என்றும் தனஞ்செய் கூறி னார்.
ஜார்க்கண்ட் சென்ற தனஞ்செய், இளைஞர் களிடமிருந்து முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பெற்றதுடன், அவர்களது பாஸ் போர்டையும் வாங்கி வந் துள்ளார். பின், சென்னையிலிருந்து விமானத்தில் கத்தார் செல்ல வேண்டும் எனக் கூறி 35 ஜார்க்கண்ட் இளைஞர்களையும் சென்னை வரவழைத்துள்ளார். இதை நம்பி சந்தோஷ் உட்பட 35 ஜார்க்கண்ட் இளைஞர்களும், கடந்த மாதம் 30ம் தேதி சென்னை வந்து, சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவ்விடுதியில், ஜார்க் கண்ட் இளைஞர்களை சந்தித்த தனஞ்செய் மற்றும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்திரா, இரண்டு லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். இதற்கு எந்த ரசீதும் வழங்கவில்லை.
பின், "அடுத்தநாள் மதியம் 2 மணிக்கு விமானம் புறப்படும்; விமான நிலையத்திற்கு வந்து விடுங்கள்' என கூறிச் சென்றுள்ளனர். அதன்படி, விமான நிலையம் சென்றவர் களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத் திற்கு தனஞ்செய் உபாத்தியா, சந்திரா இருவரும் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த ஜார்க்கண்ட் இளைஞர்கள், மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோதும் பதில் இல்லை. இதுகுறித்து, ஜார்க்கண்ட் இளைஞர்கள் இம்மாதம் 1ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந் திரனிடம் புகார் அளித் தனர்.
நேற்று முன்தினம், அடையாறில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத் திற்கு சென்று பார்த்தபோது, அங்கு பூட்டு போடப்பட்டிருந்தது. ஜார்க்கண்டிலிருந்து வந்த 35 இளைஞர்களில், 31 பேர் தங்களது ஊருக்கு திரும்பிய நிலையில், தாங் கள் இழந்த பணம், பாஸ் போர்ட்டை திரும்ப பெறும் முயற்சியில் சந்தோஷ், அஸ்ரப், கலிமுதீன் அன்சாரி, முகமது சவுகத் ஆகிய நான்கு பேர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment