உயர்நீதிமன்றப் பணி நேரம் கால் மணி நேரம் அதிகரிப்பு

விரைவாக வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் பணி நேரம் கால் மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த நீதியாண்டிலிருந்து இது அமலுக்கு வரும்.

இந்தியாவிலேயே மற்ற உயர்நீதிமன்றங்களை விட சென்னை உயர்நீதிமன்றம்தான் ஏற்கனவே கால் மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கிறது. தற்போது இது அரை மணி நேரமாக உயரப் போகிறது.

புதிய முடிவின்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மதிய உணவு இடைவேளை நேரம் ஒரு மணி நேரம் என்பதிலிருந்து 45 நிமிடமாக குறைக்கப்படுகிறது.

இந்த மாற்றத்திற்குப் பின்னர் புதிய வேலை நேரம் இப்படி இருக்கும்.

காலை - 10.30 முதல் 1.30 மணி வரை.

உணவு இடைவேளை - 1.30 முதல் 2.15 வரை.

பிற்பகல் - 2.15 முதல் மாலை 4.45 வரை.

இந்தப் புதிய பணி நேர மாற்றம் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், தினசரி 30 நிமிடம் கூடுதலாக பணியாற்றவுள்ளது சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை [^] கிளையும். வருடத்திற்கு 210 நாட்கள் இவ்வாறு வேலை பார்ப்பதன் மூலம் கூடுதலாக 105 மணி நேரங்கள் கிடைக்கின்றன. இதை நாள் கணக்கில் மாற்றினால் கூடுதலாக 19 நாட்கள் கிடைக்கும். இது வழக்குகளின் விரைவான தீர்ப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 30ம் தேதி கணக்குப்படி, சென்னை [^] உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4.68 லட்சமாகும். அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு அடுத்து (அங்கு 9.35 லட்சம் வழக்குகள்) அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள கோர்ட் சென்னை உயர்நீதிமன்றம்தான்.

தமிழகத்தில் உள்ள பிற நீதிமன்றங்களில் மொத்தம் 10.59 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வழக்குகளை விரைவாக முடிக்க மூன்று யோசனைகளை உயர்நீதிமன்றம் [^] பரிசீலித்தது. அதில் ஒன்று தற்போது ஆண்டுக்கு ஐந்து வாரம் விடப்படும் கோடை விடுமுறையை ரத்து [^] செய்வது, தசரா விடுமுறையை ரத்து செய்வது அல்லது கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறைப்பது, 3வது பணி நேரத்தை அதிகரிப்பது.

பரிசீலனைக்குப் பின்னர் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

0 comments: