மினி மராத்தான்

ஏழை பெண் குழந்தைகளுக்கான கல்வியை வலியுறுத்தி, மினி மராத் தான் போட்டி நாளை காலை 6.30 மணிக்கு கோவை, அரசு கலைக் கல்லூரியில் துவங்குகிறது. கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி ரோட் டரி கிளப், சி.ஆர்.பி.எப்.,மற்றும் டி.வி.எச். நிறுவனம் சார்பில், "பெண் குழந்தைகளுக்கான கல்வி' என்ற தலைப்பில் நாளை(நவ.,8) காலை 6.30 மணிக்கு மராத்தான் போட்டி துவங்குகிறது.


5 கி.மீ., தூர மராத்தானில் 12 வயது முதல் வயது வரம்பின்றி ஒரு பிரிவாகவும், 5 கி.மீ.,ஓட்டத்தில் 14 வயது முதல் 18 வயது வரை ஒரு பிரிவாகவும், 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் ஒரு பிரிவாகவும் மராத்தான் நடக்கும். மேலும், 10 கி.மீ., பிரிவில் ஆண்கள் 18 வயதுக்கு மேல் பங்கேற் கலாம்.


மொத்த பரிசு தொகை 2.2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. 12 வயதுக்கு மேல் பிரிவில் 5 கி.மீ., தூர ஓட்டத்தில் பங்கேற்போரில் குலுக்கல் முறையில் 150 பேரை தேர்வு செய்து, மேட்டுப்பாளையம் அருகே உள்ள "பிளாக் தண்டர் வாட்டர் தீம் பார்க்' கிற்கு இலவசமாக அழைத்து செல்லப் படுகின்றனர். மராத்தான் ஓட்டம், கோவை அரசு கலைக் கல்லூரியிலிருந்து புறப்பட்டு ரேஸ்கோர்ஸ், திருச்சி ரோடு, சுங்கம், புளியகுளம் வழியே சென்று, மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விழிப்புணர்வு ஓட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் மணிவண்ணன், சேகர் மனோகரன், கோவை டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் மாருதி ஆகியோர் போட் டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு 99525 55577, 98436 77777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரு ஸ்டேடியம் முன் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என, மராத்தான் எற்பாடு குழுவினர் தெரிவத்தனர்.

0 comments: