24 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்ணாடி

தமிழக அரசு கடந்த ஜுன் மாதம் அறிமுகப்படுத்திய ''கண்ணொளி பாதுகாப்போம்'' திட்டத்தின் மூலம் 24 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுமம், விழித்திரை சம்பந்தப்பட்ட அனைத்து கண் நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர் அகர்வால் ரெடினா பவுண்டேஷன் என்ற பெயரில் அதிநவீன கண் மருத்துவமனையை கோபாலபுரத்தில் அமைத்துள்ளது.

ரூ.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பேசுகை‌யி‌ல், சென்னையில் கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகர்வால் கண் மருத்துவமனை கடந்த 52 ஆண்டுகளாக கண் மருத்துவத்தில் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. உலகத்தரமான கண் மருத்துவமனைகளில் ஒன்றாக இது திகழ்ந்து வருவது நமக்கு பெருமை ஆகும். கண் மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் இந்தியாவில் அகர்வால் மருத்துவமனை முன்னோடியாக விளங்குகிறது.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் பள்ளி சிறார்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் கண்ணொளி பாதுகாப்பு திட்டம் கடந்த ூன் மாதம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்மூலம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 24 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து, ரூ.5 கோடியே 35 லட்சம் செலவில் இலவச கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.

1972
ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அவரது 49-வது பிறந்தநாளையொட்டி ஏழை-எளியவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எ‌ன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

0 comments: