WDஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கடலிலே ஓரமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்துக் கடத்தி சென்றுள்ளனர்.
சர்வதேச எல்லையைத்தாண்டி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்துச் சேதப்படுத்தியுள்ளனர். பிடித்து வைத்துள்ள மீன்களையும் அவர் தம் 5 படகுகளையும் கைப்பற்றியதுடன் மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.சிங்களக் காடையர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கதையாக நீடித்து வருகின்றன. இந்திய ஆட்சியாளர்கள் சிங்களக் காடையர்களோடு கூடிக் குலாவுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.1983லிருந்து தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பல் நடத்தி வரும் துப்பாக்கி சூடு, கைது நடவடிக்கைகளை இந்திய அரசு ஒரு முறைகூடக் கண்டித்ததே இல்லை.
தமிழக மீனவர்களையும் அவர்தம் மீன் பிடிக்கும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் துளியளவில் முனைப்புக்காட்டியதேயில்லை.தற்போதும் அதே மெத்தனமான போக்கையே இந்திய அரசு கடை பிடித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடத்தப்பட்டு 2 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் அக்கறை இல்லாவிட்டாலும் இந்திய இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவாவது இந்திய ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா? சர்வதேசக் கடல் எல்லையைத்தாண்டி இந்திய கடல் எல்லைக்குள் சிங்களக் காடையர்கள் அத்துமீறி நுழைவதை இந்திய அரசு எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது?இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
கடத்தப்பட்ட 18 மீனவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூக தலைவர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய அளவில் விடுதலைச்சிறுத்தைகள் முன்னின்று மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment