மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே புதிய அரசு அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து நாளை அசோக் சவான் தலைமையிலான அரசு பதவியேற்கிறது.மராட்டியத்தில் காங்கிரஸ்,
தேசியவாத காங்கிரஸ் இடையே இலாகா பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. 15 நாட்கள் இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக அமைச்சரவை அமைப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டதையடுத்து, நாளை அசோக் சவானும், சகன் புஜ்பாலும், இரு கட்சி மூத்த தலைவர்களும் ஆளுநர் எஸ்.சி.ஜமீரை சந்தித்து அரசு அமைப்பதற்கான உரிமை கோருகிறார்கள்.
ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து நாளை புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment