ரஷ்ய ராணுவ விமானம் நொறுங்கியது

ரஷ்யாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள்.

ரஷ்ய கடற்படையின் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கவும், கடலோரம் வேவு பார்க்கும் பணிகளில் ஈடுபடுத்தவும் பயன்படும் டியு-142 எம்3 ரக ரக விமானம், கிழக்கே பசிபிக் கடற்கரைக்கு அப்பால் உள்ள தடார்ஸ்கி நீரிணைவு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பறந்து கொண்டிருந்தது.

பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பியபோது திடீரென விமானம் வெடித்து சிதறி கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: