கலைமாமணி விருது வழங்கும் விழா வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த கலைஞர்களை சிறப்பிக்கும் பொருட்டு மாநில அளவிலான கலைமாமணி விருதினை வழங்கி வருகின்றது.
அவ்வகையில் 2007ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் 71 சிறந்த கலைஞர்களின் பட்டியலை, தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்கு, முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்று, கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும், கலைமாமணி விருதை ஏற்கனவே பெற்ற மூத்த கலைஞர்கள் 3 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் பொற்கிழித் தொகையும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும் வழங்கிச் சிறப்பிக்க இசைவு தந்துள்ளார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இயல் இசை மன்றம் செய்து வருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
hi friends
Post a Comment