ஊழல் பணத்தில் 2 சரக்கு கப்பல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா முதல்வராக இருந்த போது முறைகேடாக சேர்த்த பணத்தில் 2 சரக்குக் கப்பல்களை வாங்கியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுகோடா சுமார் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து இருப்பதை வருமான வரி மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.ஆனால் மதுகோடாவோ தாம் ஊழல் எதுவும் செய்யவில்லை. பழங்குடியினர் என்பதால் தன்ன அரசியல்ரீதியாக வீழ்த்த தன் மீது ஊழல் குற்றச்சாற்றை சுமத்துவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர் செய்த ஊழல் பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கிறது. அவர் 2 சரக்கு கப்பல்களை வாங்கி இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். மும்பையில் செயல்படும் “திரவீன் மேரிடைம் இந்தியன் லிமிடெட்” என்ற கப்பல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கப்பல்களை வாங்கி உள்ளார்.
அவரது கூட்டாளிகள் மனோஜ், அரவிந்த் வியாஸ் ஆகியோர் பெயரில் இந்த கப்பல்கள் வாங்கப்பட்டு உள்ளன.கப்பல் வாங்க செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு? இதற்கான பணப் பரிமாற்றம் எப்படி நடந்துள்ளது? போன்ற தகவல்களை திரட்டி வருவதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரும்புத் தாதுவை தனியார் நிறுவனங்களுக்கு விற்று முறைகேடு செய்ததிலும் மதுகோடா நிறுவனம் சம்பந்தப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் இப்போது கண்டுபிடித்து உள்ளனர்.இதில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: