கட்டணம் செலுத்தும் நேரம் நீடிப்பு

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் செலுத்தும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது, உணவு இடைவேளை இன்றி மின்கட்டணம் வசூலிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டண வசூல் பிரிவில் காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரை வேலை நேரமாகும். உணவு இடைவேளை நேரத்தில் பணம் வசூலிக்கும் எல்லா கவுன்டர்களும் மூடப்பட்டு மதியம் 1.30 மணிக்கு மேல் திறக்கப்பட்டு வந்தது. தற்போது மின் கட்டண வசூல் பிரிவு கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால் மின் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு எந்த கவுன்டரிலும் பணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது.


இவ்வசதி இருப்பதால் மின் நுகர்வோரை ஒரு மணிநேரம் காத்திருக்க வைக்காமல் பணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.
இக்கோரிக்கையை ஏற்று சென்னை மின் பகிர்மான உறுப்பினர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, இம் மாதம் முதல் மின்கட்டண வசூல் பிரிவு காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரை தொடர்ச்சியாக செயல்பட வேண்டும்.


உணவு இடைவேளை நேரத்தில் 50 சதவீத கவுன்டர்கள் மட்டும் மூடி உணவு இடைவேளைக்கு சென்று வரலாம். மற்றவர்கள், வழக்கம் போல் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என என உத்தரவிட்டுள்ளார் .

0 comments: