ஊனமுற்றோர் செயற்கை கால் பெற விண்ணப்பிக்க அழைப்பு
செயற்கை கால் மற்றும் செயற்கை கை பெற, ஊனமுற்றோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஊனமுற்ற நபர்களுக்கு, செயற்கை கால் மற்றும் செயற்கை கை இலவசமாக வழங்கப்படுகிறது. விபத்து மற்றும் நோய் தாக்குதல் காரணமாக, கை மற்றும் கால்களை இழந்த நபர்கள், செயற்கை கால் மற்றும் செயற்கை கை தேவைப்பட்டால், தங்களது பெயர் மற்றும் முகவரியுடன், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், தேசிய அடையாள அட்டை நகலுடன் நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அல்லது அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில் நடக்கும் சிறப்பு மனுநீதிநாள் முகாம்களில் பங்கேற்கும், மாவட்ட ஊனமுற்றோர் நல அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Labels:
ஊனமுற்றோர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment