கோயில், மசூதி அருகே டாஸ்மாக்

முதுகுளத்தூர் அருகே காக்கூரில் கோயில்,மசூதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊராட்சி தலைவர் உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்துள்ளார். பள்ளிகள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என விதி முறை உள்ளது. ஆனால் காக்கூரில் அனைத்து தரப்பு மக்கள் கூடும் இடம் , பிள்ளையார் கோயில், மசூதி, வடக்கு காக்கூரில் பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடம் அருகே டாஸ்மாக் கடை அமைக் கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி, கோயில்கள், மசூதிகளுக்கு செல்வோர் குடிமகன்களால் அவதிப்படுகின்றனர். பார் வசதியில்லாததால் ரோட்டோர கடைகளில் சரக்குகளை குடிக்கின்றனர். சரக்குகளை ஊற்றி கொடுக்க மறுக்கும் கடை உரிமையாளர்களிடம் மீது குடிமகன்கள் பிரச்னை செய்து பொதுமக்களை தொந்தரவு செய்வதால், விரும்பதகாத பிரச்னைகளும் ஏற்படுகிறது. இந்த கடைகளால் வன்முறைகள் நடக்கும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பீதியில் உள் ளனர். மாவட்ட நிர்வாகம் வரை முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராமத்தினரோடு தொடர் உண்ணாவிரதம் இருக்கபோவதாக ஊராட்சி தலைவர் ராஜசேகர் அறிவித்துள்ளார்.

0 comments: