ஈரான் நாட்டில் நிலநடுக்கம்

ஈரானின் தென்பகுதியில் உள்ள முக்கியமான நகரில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 700 பேர் காயமடைந்தனர். ஈரானின் தென்பகுதியில் உள்ள நகரம் பந்தர் அப்பாஸ். இந்நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.56 மணிக்கு, பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 என பதிவாகிய இந்த நிலநடுக்கத்தின் போது, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து தெருக்களில் குவிந்தனர். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.


நிலநடுக்கத்தின் போது நடந்த பல்வேறு சம்பவங்களில், 700 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த 100 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.

0 comments: