இந்திய உளவுத்துறையின் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் குற்றம் சாற்றியுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர்,இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் புலனாய்வு துறை, ஆப்கான் அதிபர், ஆப்கான் அரசு ஆகியவையெல்லாம் அவர்களைப் பற்றி பேசுவதில்லை.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.திட்டமிட்டபடி பாகிஸ்தானுக்கு எதிராக பேசி, அவர்கள் உலகை தவறாக திசை திருப்பி வருகிறார்கள்.ஏனெனில் அவர்கள் இந்திய உளவுத்துறையின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆப்கான் புலனாய்வு துறை முற்றிலும் இந்திய உளவுத்துறையின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.அது எங்களுக்கு தெரியும். எப்போதெல்லாம் நான் இதனைக் கூறுகிறேனோ அப்போதெல்லாம் அதற்கான ஆதாரங்களை ஒவ்வொவரிடமும் அளித்துள்ளேன்.
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ, இன்னும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளது என்று அமெரிக்க தலைவர்கள் கூறுவது தவறானது.அவர்கள் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை.அது அரசின் கொள்கையும் அல்ல ; இராணுவத்தின் கொள்கையும் அல்ல. அதே சமயம் அனைத்து தீவிரவாத குழுக்களுக்குள்ளும் ஐஎஸ்ஐ ஊடுருவி உள்ளது உண்மைதான்.அதுதான் ஐஎஸ்ஐ - யின் திறமை.நீங்கள் ஊடுருவினால்தான் அனைத்து இயக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
ஐஎஸ்ஐ இவ்வாறு அந்த இயக்கங்களுக்குள் ஊடுருவி இருப்பதால் அவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.சில தொடர்புகளை அவர்கள் வைத்திருக்கலாம்.
அது அவர்களது சொந்த நலனுக்கானது என அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார் முஷாரப்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment