ஏராளமானோர் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்துகிறார்கள். இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சமாதி முன்பு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். கிறிஸ்தவர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி வழிபாடு நடத்துகிறார்கள். முஸ்லிம்கள் வாசனை பத்தி, மலர் போர்வை கொண்டு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். சமாதிக்கு ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் வருகிறார்கள். சமாதிக்கு வரும் அனைவருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை இந்த அன்னதானம் நடக்கிறது.
ராஜசேகர ரெட்டி சமாதிக்கு வரும் பெரும்பாலான பொதுமக்கள் இப்போதும் கூட கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.
0 comments:
Post a Comment