உயிருக்கு உழை வைக்கும் ஊழல்

நீலகிரி நிலச்சரிவு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா மலை பகுதிகளில் 1000வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. 1400 ஏக்கர் விளைபயிர் சேதம் அடைந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவின்றி, பணம் இல்லாமல் அத்தியாவசிய பொருள் வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

ஊட்டி மலை பகுதி துண்டிக்கப் பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் அரசின் சார்பில் அதிகாரிகள் யாரும் வந்து தங்களை சந்திக்கவில்லை என்றும் முழுமையாக நிவாரண உதவி கிடைக்க வில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தே.மு.தி.க. கட்சியினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய் கின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்க வில்லை என்றும் வெறும் 2ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு அதிகாரிகள் பின் வாங்குகிறார்கள் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதுகாப்பான வீடுகட்டி கொள்ள அரசு அனுமதித்து அதற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். அங்குள்ள ராலி அணை நிரம்பி உள்ளது. அதன் நீர்கசிவு நிலத்தடி நீராக வந்து வீடுகளுக்கு சேதம் விளைவிக்கும் என பயப்படுகின்றனர்.


அந்த நீரை உரிய முறையில் வெளியேற்றி அணையை கண்காணிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் இவ்வளி பேரழிவு எப்போது நடந்ததோ அன்றைய தினமே ராணுவத்திடம் அந்த பகுதியை ஒப்படைத்து ராணுவ சாதனங்களை பயன்படுத்தி இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள் உடனே சென்று அடைந்திருக்க முடியும். உயிர் சேதத்தையும் ஓரளவு தடுத்திருக்க முடியும். மத்திய அமைச்சரின் தொகுதியாக இருந்தும் பெயரளவுக்கு 2 மாநில அமைச்சர்கள் மட்டுமே சென்று உடனே திரும்பி விட்டனர். மத்திய-மாநில அரசுகள் உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றவில்லை.


காடுகளை அழித்தும், மரங்களை வெட்டியும் கண்ட இடங்களில் சட்டத்துக்கு புறம்பாக வீடுகள் அமைய காரணமே அரசியல்வாதிகள் அதிகாரிகளின் லஞ்ச ஊழல் தான்.


இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இனியாவது நீலகிரி மாவட்ட மக்களை காப்பாற்ற அரசு துரிதமாக செயல்படுமா? என்பது பெரிய கேள்வி. கையை கட்டிக்கொண்டு வெறுமனே ஒரு அரசு இருந்துவிட கூடாது. அரசு துறையில் தாண்டவமாடும் ஊழல், மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கிறது என்பதை தான் இயற்கை நமக்கு சுட்டி காட்டுகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments: