ருக்ஷானாவுக்கு வீர விருது வழங்க சிபாரிசு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் வீடு புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை துணிச்சலுடன் தாக்கி ஒருவனை சுட்டு வீழ்த்திய வீரப் பெண் ருக்ஷானாவுக்கு தேசிய வீர விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்குமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை ஆளுநர் என்.என்.வோரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர் வோரா அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில், வீரப் பெண் ருக்ஷானாவின் செயல் மிகவும் தீரமானது. அவரும், அவரது சகோதரரும் சேர்ந்து செப்டம்பர் 27ம் தேதி நடந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதியை சுட்டுக் கொன்றது மிகவும் பாராட்டுக்குரியது.

எனவே அவருக்கு தேசிய வீர விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டியது அவசியம். இதுதொடர்பாக மாநில டிஜிபியிடம் அறிக்கை கேட்டிருந்தேன். தற்போது அறிக்கை வந்து விட்டது.

ருக்ஷனாவுக்கு தேசிய வீர விருது வழங்குமாறு மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அப்துல்லாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments: