காப்பீட்டு திட்டத்தில் 82 லட்சம் பேர் சேர்ப்பு

தமிழக அரசின் மருத் துவ காப்பீட்டு திட்டத் தில், தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி வரை, 81 லட்சத்து 91 ஆயிரத்து 511 பேர், உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்,'' என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக அரசின் மருத் துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ள சென்னை மாவட்ட உறுப்பினர் களில், 560 பேருக்கு காப் பீட்டு அட்டை வழங்கும் விழா, சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள கல்யாணம் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டம், தமிழக அரசின் பல நலத் திட்டங்களுக்கு மகுடம் வைப்பது போல உள்ளது. இத்திட்டம் நடைமுறையில் உள்ள ஆந்திரத்தில், காப்பீட்டு தொகையை பயனாளிகளே செலுத்த வேண்டும். இங்கு, இத் தொகையை அரசே செலுத்துகிறது. தமிழகம் முழுவதும், கடந்த 2ம் தேதி வரை, 81 லட்சத்து 91 ஆயிரத்து 511 பேர், இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர்.
அவர்களில், 24 லட்சத்து 84 ஆயிரத்து 897 பேருக்கு சிறப்பு அடையாள அட்டை தரப்பட்டுள்ளது. 458 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இத்திட்டத்தை செயல் படுத்த அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது; 8,019 பேர் பயனடைந்துள்ளனர். சென்னை மாவட்டத் தில், இரண்டு லட்சத்து 80 ஆயிரத்து 447 பேர், இத்திட்டத்தில் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். அவர்களில், 13 ஆயிரத்து 606 பேருக்கான காப்பீட்டு அட்டை, காப் பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. 452 பேர் பயன் பெற்றுள் ளனர்; 2.43 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன், மண்டல குழுத் தலைவர் காமராஜ், சென்னை மாவட்ட கலெக்டர் சோபனா, வருவாய் அலுவலர் முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்

0 comments: