வருமான வரித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராஞ்சியில் உள்ள அப்துல் ரஸாக் நினைவு மருத்துவமனையில் இன்று மதியம் மதுகோடா அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஜாவேத் அக்தர் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே அவரது உடல்நலக் குறைவுக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஹவாலா மோசடி தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மதுகோடாவிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment