ராமகோபாலன் வேண்டுகோள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஆன்றோர் பெருமக்களையும், ஆதீனப் பெரியோர்களையும், மடாதிபதிகளையும், இந்து இயக்கத் தலைவர்களையும் அழைத்து உரையாற்றச் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வேண்டியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்திருப்பதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது. தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் விரும்பிக் கற்பதை முன்னிறுத்தி இம்மாநாடு அமைய வேண்டும். தமிழும் பக்தி ஆன்மிகமும் இரண்டறக் கலந்தவை. இதனைக் கருத்தில் கொண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பக்தி ஆன்மிகத்திற்கு அரங்குகள் அமைத்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

0 comments: