மெரீனாவில் தனியார் 'செக்யூரிட்டி'

மெரீனா கடற்கரை அழகுபடுத்தப்படுவதைத் தொடர்ந்து, அலங்கார விளக்குகளை பாதுகாக்க தனியார், "செக்யூரிட்டி'களை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலகில் பெரிய அழகிய கடற்கரையில் ஒன்று மெரீனா கடற்கரை. இதை 17 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் முடிந்ததும், அழகுபடுத் தப்பட்ட மெரீனா கடற்கரையை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார். மெரீனா கடற்கரையில் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள், 14 இடங்களில் சிறிய பூங்காக் கள், 14 இடங்களில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதைகளிலும், பூங்காக்களிலும் மூன்று கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் 700க்கும் மேற்பட்ட அலங்கார விளக்குள் அமைக்கப்பட உள்ளன. மெரீனா கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள பளிங்கு கற்கள் உடைப்பது, அலங்கார விளக்குகள் உடைப்பது போன்ற சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதோடு பூங்காவிற்கு தண்ணீர் பாய்ச்சும், "ஸ்பின்ச்' உடைக்கப் பட்டு இருப்பது தெரிந்தது. இதனால், சென்னை மாநகராட்சி, மெரீனா கடற்கரையில், பாதுகாப்புக்காக தனியார், "செக்யூரிட்டி'களை நியமிக்க திட்டமிட்டு, நேற்று ஒப்பந்தம் கோரியுள்ளது. தினந்தோறும் காலை முதல் இரவு 10 மணி வரை கண்காணிக் கும் வகையில், இரண்டு "ஷிப்ட்'களில் செக்யூரிட்டிகள் பணிபுரியும் வகையில் ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு ஏழு செக்யூரிட்டிகள் வீதம், இரண்டு ஷிப்டுகளில் 14 செக்யூரிட்டிகள் பணிக்கு அமர்த்தப்படுவர். மெரீனா கடற் கரையில் உழைப்பாளர் சிலை முதல், கலங்கரை விளக்கம் வரை, 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
செக்யூரிட்டிகள் மெரீனா கடற்கரையில் உள்ள பூங்காவிற்கு வரும் பொதுமக்களை ஒழுங்குபடுத்துவது, அலங்கார விளக்குகள் மற் றும் பூச்செடிகளை நாசம் செய்யாமல் பார்த்துக் கொள்வது, பொருட்கள் திருட்டு போவதை தடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர். இதற்காக திடகாத்திரமான உடல்வாகு கொண்ட 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே செக்யூரிட்டிகளாக நியமிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் மாநகராட்சி நிபந்தனை விதித்துள்ளது.

0 comments: