ஈரான் தலைநகர் இடம் மாறுகிறது

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதி்ப்புக்குள்ளாகி வருவதால் தலைநகரை இடம் மாற்ற அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடும் நில நடுக்கப் பகுதியி்ல் அமைந்துள்ள நிதெஹ்ரானை படுமோசமான நிலநடுக்கம் தாக்கும் என்று சர்வதேச புவியியல் நிபுணர்கள் எச்சரித்து வருவதால் ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து தலைநகரை இடமாற்றம் செய்யலாம் என்று அந் நாட்டு மத-அரசியல் தலைவர் ஆயதுல்லா கொமேனி தெரிவித்த யோசனையை அந் நாட்டு அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டது.

புதிய தலைநகர் எங்கு அமையும் என்று தெரியவில்லை.

ஈரானிய அரசியல்-சமூக வரலாற்றில பல தலைநகரங்கள் இருந்து வந்துள்ளன. இதில் இஸ்பகான், கஸ்வின், ஷிராஸ், மஷ்ஷத், ஹமேடான் ஆகியவை அடங்கும்.

கடைசியாக 1795ம் ஆண்டில் நாட்டை ஆண்ட ஆகா முகம்மத் கான் தான் தெஹ்ரானை தலைநகராக்கினார். அன்று முதல் தெஹ்ரானே இந் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதா, கலாச்சாரத் தலைநகராக விளங்கி வருகிறது.

இப்போது இந்த நகரில் 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு இந்த நகரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 40,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்தே தலைநகரை மாற்றினால் தான் தெஹ்ரானில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிர் பலிகளையும் குறைக்க முடியும் என்ற யோசனைகள் தீவிரமாயின.

பூமிக்கு அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரும் பெரும்பாறைத் திட்டுக்களின் மீது தான் தெஹ்ரான் அமைந்துள்ளது. இந்த நகரும் திட்டுக்களால் தான் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

அடிக்கடி நகர்ந்து இவை மிகவும் இலகுவாகிவிட்டதால் விரைவிலேயே வரலாறு காணாத அளவுக்கு இப் பகுதியில் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள்.

0 comments: