ஊழல் இந்தியாவுக்கு 84வது இடம்

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 84வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.அரசுத் துறை ஊழலை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியலை டிஐ வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு பெர்லினைச் சேர்ந்ததாகும். சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் ஆகிய நாடுகளில் உள்ளதைப் போன்ற வரி சலுகைகளை இந்திய வங்கிகளிலும் அமல்படுத்தினால் பெருமளவிலான கள்ளப் பணப் புழக்கத்தை தடுக்க முடியும் எனவும் இது ஆலோசனை கூறியுள்ளது.இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் ஹியூகட் லாபெல் கூறுகையில், ஊழல் பணம் பாதுகாக்கப்படக் கூடாது. அதற்கு எங்குமே புகலிடம் இருக்கக் கூடாது.

வங்கி சட்டங்களில் பெருமளவில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய நேரம் இது என்றார் அவர்.மிகப் பெரிய அளவில் ஊழல் மலிந்து கிடக்கும் நாடுகளாக சோமாலியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஈராக் ஆகியவை உள்ளன. நியூசிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர் ஆகியவை ஊழலற்ற நாடுகள் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை மோசமாகியுள்ளதாம். கடந்த 2004வது ஆண்டில், 146 நாடுகளில் 90வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பட்டியலில் இந்தியாவை விட நல்ல இடத்திற்கு செர்பியா (83), பர்கினோ புசோ (79), பெரு (75), காணா (69) ஆகிய நாடுககள் உள்ளன. 'நண்பர்' பாகிஸ்தான் 139வது இடத்தில் உள்ளார். இன்னொரு நண்பரான வங்கதேசமும், இதே இடத்தில்தான் உள்ளது. இலங்கைக்கு 97வது இடம். பூடான் 49வது ரேங்க்கைப் பெற்றுள்ளது.

0 comments: