சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் பாம்பு கடித்து இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் 5ம் வகுப்பு படித்த மாணவி பிரியங்கா பள்ளி வளாகத் தில் பாம்பு கடித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்தார்.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு பள்ளி நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் 3000 மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ராமகிருஷ்ணா பள்ளியில் சுற்றுசுவர் உடன்அமைக்க வேண்டும். பள்ளி வளா கத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் சங்கம் சார்பில் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment