முஷாரப்பிடம் விசாரணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை தொடர்பாக முன்னாள் அதிபர் முஷாரப்பிடம் ஐ.நா., அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, கடந்த சில வருடங்களுக்கு முன், பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஐ.நா., முன்னாள் அதிபர் முஷாரப்பிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக தனியார் "டிவி' சேனல் ஒன்று தெரிவித்துள்ளதாவது: பெனசிர் கொலை தொடர்பாக, பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதிய ஐ.நா., அதிகாரிகள், முஷாரப்பிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி, நியூயார்க்கில் முஷாரப்பிடம் ஐ.நா., அதிகாரிகள் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான முஷாரப், பெனசிர் புட்டோவுக்கு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் உள்ள அச்சுறுத்தல் குறித்து அரசு தரப்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டது; இதன் காரணமாக, பாகிஸ் தானிலிருந்து தானாகவே வெளியேறி வெளிநாட்டில் வசித்து வந்த பெனசிர் புட்டோவிடம், இப்போதைக்கு பாகிஸ்தானுக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.பெனசிர் புட்டோவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. ஆனால், அரசு வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை அவரது பாதுகாவலர்கள் மதிக்காமல் அசட்டையாக இருந்து விட்டனர் என, விசாரணைக் கமிஷன் முன் முஷாரப் தெரிவித்துள்ளார்.இவ்வாறு தனியார் "டிவி' தெரிவித்துள்ளது

0 comments: