கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங் களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிண்டி கத்திபாரா மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக் காக கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் செல்லும் வாகன போக்குவரத் தில் கடந்த 18ம் தேதி முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
போரூர் மற்றும் வடபழனி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங் கள், ஆலந்தூர் பக்கம் செல்ல, கத்திப்பாரா மேம்பாலத்தில் போரூர் செல்லும் வழியாக வர வேண்டும். பட் ரோடு சேரும் இடத்தில் இடது புறம் திரும்பி, நேரு சிலை வழியாகச் சென்று, வலதுபுறம் திரும்பி ஜி.எஸ்.டி., சாலையை கடந்து வேம்புலி அம்மன் தெரு வழியாக வாகனங்கள் செல்லலாம். நேரு சிலை அருகே உள்ள சர்வீஸ் சாலை ஜி.எஸ்.டி., சாலை முதல் பட் ரோடு வரை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு புறநகர் போலீஸ் கமிஷனரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment