இராணுவத்தில் தற்கொலை அதிகரிப்பு

அமெரிக்க இராணுவத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் இளம் வீரர்கள்தான் மிக அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்வதாகவும்,கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க இராணுவ துணை தலைவர் ஜெனரல் பீட்டர் சியாரெல்லி தெரிவித்தார்.


கடந்த 2008 ஆம் ஆண்டில் 197 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பு வாரம் வரை 211 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


என்ன காரணத்திற்காக இளம் வீரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதற்கான காரணத்தை கண்டறிய இராணுவம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments: