மறு மார்க்கத்தில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0640) மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு திங்கள்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0652) மறுநாள் காலை 08.55 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் எழும்பூரில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0651) மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் ஏழைகள் ரதம் இரயிலானது (வ.எண்.0607) மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ஏழைகள் ரதம் இரயிலானது மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு சனிக்கிழமைகளில் எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0609) மறுநாள் காலை 10.25 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.மறு மார்க்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0610) மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.ஜனவரி 19ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0653) மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.மறு மார்க்கத்தில் ஜனவரி 20ஆம் தேதி கொல்லத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண். 0654) மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
20ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண்.0633) மறுநாள் மதியம் 3.40 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.மறு மார்க்கத்தில் ஜனவரி 21ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு இரயிலானது (வ.எண். 0634) மறுநாள் மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.இந்த சிறப்பு இரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment