இங்கு புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் வெளியான டி.715செல் போன்கள் இங்கு தான் வடிவமைக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. சர்வதேச அளவில் சோனி எரிக்சன் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சோனி எரிக்சனின் புதிய தலைவராக பொறுப்பேற்றவர் உலகம் முழுவதும் உள்ள கிளைகளின் செயல் பாட்டை ஆராய்ந்தார். அவர் அனுப்பிய பிரதிநிதிகள் சென்னை வந்து ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சென்னை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் இம்மையத்தை உடனடியாக மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலுவலகமும் மூடப்படுகிறது. சென்னை அலுவலகம் மூடப்பட்டதன் மூலம் 60ஊழியர்கள் உடனடியாக வேலை இழந்தனர். 2010-ம் ஆண்டு வாக்கில் 2ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
0 comments:
Post a Comment