அருகே கல்குவாரியில் பாறையை தகர்க்க வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகளில் மின்னல் தாக்கியதால் மின்சாரம் பாய்ந்து பாறை வெடித்துச் சிதறியதில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.காஞ்சிபுரத்தை அடுத்த தாளவாக்கம் அருகே உள்ள மதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு நேற்று மாலை 3.30 மணி அளவில் பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பாறைக்கு அடியில் அவர்கள் ஜெலட்டின் குச்சிகளை வைத்து விட்டு மற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, திடீரென்ற இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதால் ஜெலட்டின் குச்சிகளில் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் பயங்கர சத்தத்துடன் பாறை வெடித்துச் சிதறியது.வெடித்துச் சிதறிய பாறை துண்டுகள் நாலா புறமும் பாய்ந்தன. அந்த பாறை துண்டுகள் தாக்கியதில் சண்முகம் (28), மனோகர் (50), ஏழுமலை (45), செல்வராஜ் (40), செவ்வந்தி (30) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒரு பெண் உள்பட 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாபு, தாமோதரன், அமுல் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து தாளவாக்கம் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறன்றனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியும் மாவட்ட கூடுதல் நீதிபதியுமான ஆர்.நம்பிராஜன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் விபத்து நடந்த கல்குவாரி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
0 comments:
Post a Comment