கடல் வற்றியதால்பீதி

பருவமழை தீவிரம் காரணமாக மன்னார் வளைகுடா கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தை அடுத்த வடகாறு கடற்பகுதியில் திடீரென கடல் நீர் வற்றியது.

இதனால் அப்பகுதியில் பாறைகள் முழுவதும் வெளியில் தெரிந்தன. நல்ல மழை பெய்த போதும் காற்று குறைந்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்டுள்ள இந்த கடல் மாற்றத்தால் , மீனவர்கள் பீதியடைந்தனர்.
நீண்ட தூரம் வரை பாறைகள் தெரிந்ததால் படகுகளை செலுத்துவதிலும் பின்னடைவு ஏற்பட்டது. கடலின் இந்த திடீர் மாற்றத்தால் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இடம் பெயர்ந்து செல்ல வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

0 comments: