வைகோ ஆஜர்

சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட வழக்கில் இன்று ஜார்ஜ் டவுன் 7வது நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ, மு.கண்ணப்பன் ஆகியோரின் பேச்சு சட்டத்துக்குப் புறம்பாக இருந்ததாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டதாகவும், எனவே வைகோ, மு.கண்ணப்பன் ஆகியோரின் காவலை நீடிக்க தேவையில்லை என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து வைகோ, கண்ணப்பன் இருவரையும் விடுதலை செய்தும், நீதிமன்றத்தின் அழைப்பானை அனுப்பப்படும்போது ஆஜரானால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் அடைப்படையில் சென்னை பெருநகர ஜார்ஜ் டவுன் 7வது நீதிமன்றத்தில் இன்று (21.11.2009) ஆஜாராகும்படி காவல்துறையினர் கடந்த 15ஆம் தேதி வைகோவுக்கு அழைப்பானை கொடுத்தனர். அதன்பேரில் இன்று நீதிமன்றத்தில் வைகோ ஆஜராகிறார்.

0 comments: