ஓட்டலில் இளம்பெண்கள் ஆபாச நடனம்

பெங்களூரில் பார் ஓட்டல் ஒன்றில் நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடிய 20 இளம்பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரில் நள்ளிரவில் பார் ஓட்டல்களில் மது விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்து இருக்கிறது.இதேபோல் பார் ஓட்டல்களில் ஆபாச உடை அணிந்து இளம்பெண்கள் நடனம் ஆடுவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு மது வினியோகம் செய்வதற்கும் தடை செய்யப்பட்டு உள்ளது.


ஆனாலும் இந்த தடையை மீறி பல பார் ஓட்டல் களில் இதுபோன்று ஆபாச நடனம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த நிலையில், கப்பன் பார்க் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பார் ஓட்டல் ஒன்றில் ஆபாச உடை அணிந்து கொண்டு இளம்பெண்கள் நடனம் ஆடுவதாகவும், மது விற்பனை நடைபெறுவதாகவும் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அந்த பார் ஓட்டலுக்குள் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஆபாச உடை அணிந்து கொண்டு இளம் பெண்கள் நடனமாடிக் கொண்டே, ஆபாச நடனத்தை பார்க்க வந்த வாடிக்கையாளர்களுக்கு மது வினியோகம் செய்து இருந்தனர். மேலும் வாலிபர்கள் சிலரும் அந்த பெண்களுடன் நடனமாடிக் கொண்டு இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆபாச நடனம் ஆடிய 20 பெண்கள், பார் ஓட்டலின் உரிமையாளர் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 comments: