ஒலிம்பிக் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்

சரத்குமார் வேண்டுகோள் !

பாடி பில்டிங் விளையாட்டிற்கு ஒலிம்பிக் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாடி பில்டிங் சங்க தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். திருச்சியில் ஜனவரி மாதம் மாநில பாடி பில்டிங் (ஆணழகன்) போட்டி நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாடி பில்டிங் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து சங்கத்தின் செயற்குழு கூட்டம் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,பாடி பில்டிங் விளையாட்டை மேலும் பிரபலமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.


உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு காரணமாக எல்லா இடங்களிலும் ஜிம் அமைக்கப்பட்டு வருகிறது.உடல்திறனை மையமாக கொண்ட பளு தூக்கும் விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால் பாடி பில்டிங் விளையாட்டு இடம்பெறவில்லை. இந்த விளையாட்டிற்கு ஒலிம்பிக் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். மேலும், ஜனவரி 9ம் தேதி திருச்சியில் மாநில சீனியர் பாடி பில்டிங் (ஆணழகன்) போட்டி நடைபெற உள்ளது. ஜூனியர் பாடி பில்டிங் போட்டி திருவாரூரில் நடைபெறும்.


கர்நாடகா மாநிலத்தில் நவம்பர் 29ம் தேதி இந்திய பாடி பில்டிங் கிளாசிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய சீனியர் பாடி பில்டிங் போட்டி கோவாவில் நடைபெறுகிறது என்றார்

0 comments: