பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது ஆசிரம பெயர் கூறி குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த கொடுமை அரங்ககேறியுள்ளது.
பேரூர், காளம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மூன்று வயது சிறுமி, மூன்று சிறுவர்கள் பொது மக்களிடம் தங்களது கையில் வைத்திருந்த அட்டையை காட்டி பிச்சை கேட்டனர்.
அந்த அட்டையில், இவர்களுக்கு, பணமோ, துணியோ கொடுத்து உதவுங்கள் என்றும் இப்படிக்கு அனாதை ஆசிரம தலைவர் கிருஷ்ணய்யா என புகைப்படத்துடன் கையெழுத்திட்டு இருந்தது.
இதனையடுத்து, பொதுமக்கள் சிலர் அந்த ஆசிரம தலைவரோடு போனில் பேசியபோது, பணம் இருந்தால் குழந்தைகளிடம் கொடுங்கள், இல்லாவிட்டால் குழந்தையை விட்டு விடுங்கள் என ஆசிரம தலைவர் கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள், குழந்தைகளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த குழந்தைகள் பெயர், அனிதா (5), அஜய் (7), மஞ்சு (9), தேவா (6) என தெரிய வந்தது.
இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் ஆலாந்துறையில் உயிரோடு தங்கியிருப்பதும், ஆசிரமத்தின் உத்தரவின் பேரிலேயே இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment