பைலட் மர்ம சாவு

சென்னையில் இளம் பைலட் ஒருவர் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் பைலட் கிருஷ்ண நாராயணன் (28). இவர் திருவான்மியூரில் தங்கியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு வீ்ட்டுக் கதவு மூடப்பட்டு வெளியூர் போயிருப்பதாக ஒரு அட்டை தொங்க விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்து மிகவும் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது அழுகிய நிலையில் கிருஷ்ண நாராயணன் பிணமாகக் கிடந்ததைப் பார்த்தனர்.

கட்டில் மீது உடல் விழுந்து கிடந்தது. ஐந்து அல்லது 6 நாட்களுக்கு முன்பு நாராயணன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரைக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வெளியே வெளியூர் போயிருப்பதாக அட்டையை சிலர் தொங்க விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments: