விமான எரிபொருள் கட்டணம் மீண்டும் உயர்வு!

விமானப் பெட்ரோல் விலையை கிலோ லிட்டருக்கு ரூ.3400 உயர்த்தியுள்ளன பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். இதனால் மீண்டும் விமானக் கட்டணங்கள் உயரும் நிலை தோன்றியுள்ளது.

ஏவியேஷன் டர்பைன் ஃப்யூயல் (ATF) எனப்படும் விமான பெட்ரோல் விலையை மாதந்தோறும் முதல் மற்றும் 16-ம் தேதிகளில் மறு சீரமைப்பு செய்வது வழக்கம். இதுவரை விமானப் பெட்ரோலின் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 36,188.27 ஆக இருந்தது.

ஆனால் மீண்டும் அதனை 9 சதவிகிதம் அளவுக்கு விலை உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். நான்கு முக்கிய நகரங்களிலும் இந்த விமான எரிபொருளின் விலை எவ்வளவு என்று இன்று மாலை அல்லது நாளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்க உள்ளன.

இந்த அளவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அது விமான கட்டணங்களிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

0 comments: