இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' உலககோப்பை லீக் போட்டியில், டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீஸ் "திரில்' வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் உலககோப்பை தொடரின் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்.
மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், குரூப் "டி' பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் பீல்டிங் தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப், கீஸ்வெட்டர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. லம்ப் 28 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் 3 சிக்சர்கள் அடித்த கீஸ்வெட்டர் (26), மில்லர் பந்து வீச்சில் வெளியேறினார். பீட்டர்சன் (24) ஆறுதல் அளித்தார். கோலிங்வுட் (6) ஏமாற்றினார்.
சூப்பர் ஜோடி: பின்னர் களமிறங்கிய மார்கன், லூக் ரைட் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. "டுவென்டி-20' அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார் மார்கன். இவர் 55 ரன்களுக்கு (3 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டானார். இந்த ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 191 ரன்கள் சேர்த்தது. லூக் ரைட் 45 (4 சிக்சர், 1 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
கெய்ல் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கெய்ல் அதிரடி துவக்கம் தந்தார். இவருக்கு சந்தர்பால் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 2. 2 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட ஆட்டம் பாதிப்புக்கு உள்ளானது.
சுமார் 1 மணி 30 நிமிடம் தடைபட்ட ஆட்டம், மீண்டும் துவங்கியது. வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி, 6 ஓவருக்கு 60 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் சுவான் ஓவரில் கெய்ல் (25) அவுட்டானார். அடுத்து வந்த போலார்டும், டக்-அவுட்டானார்.
திரில் வெற்றி: கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. பிளட்சர், சந்தர்பால் களத்தில் நின்றனர். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இரண்டாவது பந்தில் பிளட்சர் 2 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்பட வில்லை. 4 வது பந்தில் பிளட்சர் பவுண்டரி அடிக்க, வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி தகர்ந்தது. 5 வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, 5.5 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. பிளட்சர் (12), சந்தர்பால் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
---------
ஸ்கோர் போர்டு
இங்கிலாந்து
லம்ப் (ப) கெய்ல் 28 (18)
கீஸ்வெட்டர் எல்.பி.டபிள்யு., (ப) மில்லர் 26 (14)
பீட்டர்சன் (கே) சர்வான் (ப) சமி 24 (20)
கோலிங்வுட் (ப) சமி 6 (8)
மார்கன் (கே) போலார்டு (ப)பிராவோ 55 (35)
லூக் ரைட் -அவுட் இல்லை- 45 (27)
பிரஸ்னன் -அவுட் இல்லை- 0 (0)
உதிரிகள் 7
மொத்தம் (20 ஓவரில் 5 விக்., இழப்பு) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-36 (லம்ப்), 2-66 (கீஸ்வெட்டர்), 3-81 (கோலிங்வுட்), 4-88 (பீட்டர்சன்), 5-183 (மார்கன்).
பந்து வீச்சு: பென் 3-0-23-0, ராம்பால் 3-0-52-0, கெய்ல் 1-0-11-1, மில்லர் 4-0-29-1, சமி 4-0-22-2, பிராவோ 4-0-36-1, போலார்டு 1-0-16-0.
வெஸ்ட் இண்டீஸ்
கெய்ல் (கே) யார்டி (ப) ஸ்வான் 25 (12)
சந்தர்பால் -அவுட் இல்லை- 15 (13)
போலார்டு (ஸ்டெ) கீஸ்வெட்டர் (ப) ஸ்வான் 0 (1)
பிளட்சர் -அவுட் இல்லை- 12 (10)
உதிரிகள் 8
மொத்தம் (5.5 ஓவரில் 2 விக்., இழப்பு) 60
விக்கெட் வீழ்ச்சி: 1-41 (கெய்ல்), 2-42 (போலார்டு).
பந்து வீச்சு: சைட்பாட்டம் 1-0-15-0, ஸ்வான் 2-0-24-2, பிரஸ்னன் 1-0-7-0, யார்டி 1-0-6-0, பிராட் 0.5-0-8-0.
0 comments:
Post a Comment