ஜெயவர்தனா அதிரடியில் இலங்கை வெற்றி * மழையால் ஆட்டம் பாதிப்பு

ஜெயவர்தனா சதம் அடித்து அசத்த, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான "டுவென்டி-20' உலககோப்பை லீக் போட்டியில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், குரூப் "பி' பிரிவில் இடம் பெற்ற இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங் தேர்வு செய்தார்.


ஜெயவர்தனா அதிரடி: கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு, ஜெயவர்தனா அதிரடி துவக்கம் தந்தார். தில்ஷன் (2) சோபிக்க வில்லை. பெரேரா (23) ஆறுதல் அளித்தார்.


சங்ககரா ஏமாற்றம்: பின்னர் களமிறங்கிய கேப்டன் சங்ககரா (3), சண்டிமால் (9), மாத்யூஸ் (4) ஆகியோர் பெரும் ஏமாற்றம் அளித்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் அபாரமாக ஆடிய ஜெயவர்தனா "டுவென்டி-20' அரங்கில் முதல் சதம் கடந்தார். இவர் 100 ரன்களுக்கு (4 சிக்சர், 10 பவுண்டரி) வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 173 ரன்கள் குவித்தது. ஜெயசூர்யா (3), மலிங்கா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


மழை பாதிப்பு: சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு, மசகட்சா, தைபு துவக்கம் தந்தனர். ஒரு ஓவர் மட்டும் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதற்குப் பின் துவங்கிய ஆட்டம், டக்-வொர்த் லீவிஸ் முறைக்கு சென்றது. ஜிம்பாப்வே அணியின் வெற்றி இலக்கு, 11 ஓவர்களுக்கு 104 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. முடிவில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவ்வெற்றியின் மூலம் உலககோப்பை தொடரில் "சூப்பர்-8' வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது இலங்கை அணி.
-------------
நான்காவது வீரர்
நேற்று 100 ரன்கள் எடுத்த ஜெயவர்தனா,"டுவென்டி-20' வரலாற்றில் சதம் கடந்த முதல் இலங்கை வீரரானார். தவிர, சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் இம்மைல் கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (117 ரன், எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (116* ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 2010), இந்தியாவின் ரெய்னா (101, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010) ஆகியோர் இச்சாதனை படைத்துள்ளனர். தவிர, உலக கோப்பை "டுவென்டி-20' அரங்கில் இச்சாதனை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் பெற்றார் ஜெயவர்தனா.


---------


ஸ்கோர் போர்டு


இலங்கை


ஜெயவர்தனா (கே) கிரீமர் (ப) பிரைஸ் 100 (64)
தில்ஷன் (கே) மோபு (ப) சிகும்பரா 2 (4)
பெரேரா (கே) சிகும்பரா (ப) லேம்ப் 23 (19)
சங்ககரா (கே) பிரைஸ் (ப) கிரீமர் 3 (7)
சண்டிமால் (கே) மோபு (ப) உட்சேயா 9 (8)
மாத்யூஸ் (கே) எர்வின் (ப) லேம்ப் 4 (6)
கபுகேதரா (கே) மசகட்சா (ப) பிரைஸ் 13 (6)
ஜெயசூர்யா -அவுட் இல்லை- 3 (3)
மலிங்கா -அவுட் இல்லை 2 (3)
உதிரிகள் 14
மொத்தம் (20 ஓவரில் 7 விக்., இழப்பு) 173
விக்கெட் வீழ்ச்சி: 1-24 (தில்ஷன்), 2-80 (பெரேரா), 3-96 (சங்ககரா), 4-113 (சண்டிமால்), 5-138 (மாத்யூஸ்), 6-166 (கபுகேதரா), 7-166 (ஜெயவர்தனா).
பந்து வீச்சு: மோபு 3-0-27-0, பிரைஸ் 4-0-31-2, சிகும்பரா 2-0-21-1, லேம்ப் 4-0-34-2, உட்சேயா 4-0-32-1, கிரீமர் 3-0-23-1.



ஜிம்பாப்வே


மசகட்சா -ரன் அவுட் (ஜெயவர்தனா) 4 (6)
தைபு -அவுட் இல்லை- 12 (13)
டெய்லர் -அவுட் இல்லை- 11 (11)
உதிரிகள் 2
மொத்தம் (5 ஓவரில் 1 விக்., இழப்பு) 29
விக்கெட் வீழ்ச்சி: 1-10 (மசகட்சா).
பந்து வீச்சு: மெண்டிஸ் 2-0-9-0, மலிங்கா 1-0-6-0, ஜெயசூர்யா 1-0-8-0, ரன்திவ் 1-0-6-0.

0 comments: