சென்னை ஏர்போர்ட்டிற்கு பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் டில்லியில் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பயணிகள், பார்வையாளர்கள் கண்காணிக்கப் படுகின்றனர். பேக்கேஜ்கள் இரண்டு அடுக்கு முறையில் சோதனையிடப்படுகின்றன. கேட்பாரற்ற பொருட்கள் குறித்து, அதிக கவனம் செலுத் தப்படுகிறது. வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே, விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையத்தின் பல இடங்களிலும், தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: