காரில் 'சீட் பெல்ட்' அணிவது கட்டாயம் : போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

'காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படும்' என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையின் போது, காரில் 'சீட் பெல்ட்' அணியாமல் செல்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் தங்கள் சோதனையை துவக்கியுள்ளனர். ஹெல் மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது, அடிக்கடி நடவடிக்கை எடுத்து, அபராத தொகை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, காரில் செல்பவர் கள், 'சீட் பெல்ட்' அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு முகாமை துவக்கியுள்ளனர்.


போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் விஜேந்திர பிதாரி, உதவி கமிஷனர் மகேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் தம்பிராஜன், சுந்தர்ராஜன், மாரிமுத்து மற்றும் போலீசார் நந்தனம் சந்திப்பில் கார்கள், வேன்கள் போன்றவற்றின் ஓட்டுனர்களிடம், 'சீட் பெல்ட்' அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது குறித்த துண்டு பிரசுரங்களையும், அவர்களிடம் வினியோகித்தனர்.


தி.நகர் போக்குவரத்து உதவி கமிஷனர் மகேந்திரன் கூறும் போது,'சீட் பெல்ட்' அணிந்து சென் றால், இந்த உயிர் பலியை தவிர்க்கலாம். கார் மற்றும் வேனில் செல்வோர், 'சீட் பெல்ட்' அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. வரும் 15 நாட் களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் பின், 'சீட் பெல்ட்' அணியாமல் செல் பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

0 comments: