தமிழகத்தில் நாளை (5ம் தேதி) வணிகர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, கோயம்பேடு காய்கறி மற் றும் பழ மார்க்கெட்டிலுள்ள, பெரும்பாலான கடை உரிமையாளர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். பூ மார்க்கெட்டில் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என, பூக் கடை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோயம் பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கச் செயலர் மூக்கையா கூறியதாவது: பூக்களை பொறுத்தவரையில், மார்க்கெட்டிற்கு வரும் அன்றைய தினமே விற்க வேண்டிய நிலையுள்ளது. இதனால் வணிகர்கள் தினத்தன்று விடுமுறை விடப்படுவதில்லை. விடுமுறை அறிவித்ததால், சில்லறை வியாபாரிகள் பலர் பாதிக்கப்படுவர். ஆகையால், பூக்கடைகள் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு மூக்கையா கூறினார்.
0 comments:
Post a Comment