இலவச ஆஸ்துமா சிகிச்சை முகாம்

போரூர் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக மருத்துவமனையில், குழந்தைகளுக் கான இலவச ஆஸ்துமா சிகிச்சை முகாம் ஐந்து நாள் நடைபெறுகிறது.


உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் போரூர் ஸ்ரீராமச் சந்திரா பல்கலைக்கழக மருத்துவமனையில், இலவச ஆஸ்துமா சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இந்தாண்டு நேற்று (3ம் தேதி) முதல் 7ம் தேதி வரை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் இலவச ஆஸ்துமா சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், ஒரு மாத கைக் குழந்தை முதல் 18 வயதுக்கு குறைவானவர்களும் இலவச சிகிச்சை பெறலாம்.


குழந்தைகளுக்கு தொடர்ந்து அல்லது அடிக்கடி சளி, இருமல், மூச்சுவிட கஷ்டப்படும் குழந்தைகள், இந்த முகாமில் பயன் பெறலாம். குழந்தைகள் நலமருத்துவ துறையின் புறநோயாளிகள் பிரிவில் நடக்கும், இந்த முகாமில் அடிப்படை சோதனைகள் இலவசமாக செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 94441 01557 என்ற, மொபைல் போனில் தொடர்பு கொள்ள லாம். காலை 8 மணி முதல் பகல் 12 மணிக்குள் நேராக வரலாம்.


ஸ்ரீராமச்சந்திரா பல் கலைக் கழகத்தின், குழந்தை நல மருத்துவத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் பத்மாசனி கூறும் போது,'குழந்தைகளுக்கு தொடர்ந்து இருமல், மூச்சு வாங்குதல், இரவில் விசில் ஊதுவது போல் சத்தம் ஆகியவற்றை சரியாக கட்டுப் படுத்தவில்லை என்றால், பள்ளிகளுக்கு தொடர்ந்து செல்வதை தடுத்து விடும். மேலும், விளையாடுவது மற்றும் உடல் ரீதியான சுறுசுறுப்பும் குறையும். நுரையீரலை பாதிக்கும். இங்கு சிகிச்சை அளிக்கப்படும் குழந்தைகளுக்கு 'பாலோ-அப்' சிகிச்சையும் அளிக்கப் படுகிறது. தினமும் 180 முதல் 200 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம்,' என்றார்.

0 comments: