ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கு சென்னையில் விடுமுறை விடப் பட்டுள்ளன. அலுவல் மற்றும் தொழில் காரணமாக சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலர், தங்கள் குடும்பத் துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். மற்ற மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால், அவர்களில் பலர் கோடை விடுமுறையை கழிக்க சொந்த ஊர் களுக்கு செல்லாமல் உள்ளனர்.
மேலும், தென்மாவட்டங் களில் இருந்து விடுமுறையை கழிப்பதற்கும் பலர், சென்னையில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு வந்துள்ளனர். கோடை வெயில் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், காய்கறிகள் மட்டும் அல்லாமல் இறைச்சிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கோழி(சிக்கன்) மற்றும் ஆட்டிறைச்சி(மட்டன்) விலைகள் மெல்ல அதிகரித்த வண்ணம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரு கிலோ மட்டன் 300 முதல் 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல சிக்கன் கிலோ 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன்பிடித் தடை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், சிறிய ரக மீன்களின் விலையும் தாறுமாறாக உயர்ந் துள்ளது. பெரிய வகை மீன்களின் விலை கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், மீன் உணவை தவிர்த்து மட்டன், சிக்கன் வாங்கி சுவைக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அவற்றிற்கும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதுவே மட்டன், சிக்கன் விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது. இறைச்சிகளின் விலை உயர்வால், நடுத்தர மற்றும் அடித்தட்டு அசைவ உணவு பிரியர்கள் பரிதவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
0 comments:
Post a Comment