போராடி வென்றது பாக்.,

வங்கதேசத்துக்கு எதிரான "டுவென்டி-20' உலககோப்பை லீக் போட்டியில், 21 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது பாகிஸ்தான்.


வெஸ்ட் இண்டீசில் நடக்கும் மூன்றாவது


"டுவென்டி-20' உலககோப்பை தொடரின் நேற்றைய லீக் போட்டியில் குரூப் "ஏ' பிரிவில் இடம் பெற்ற, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' ஜெயித்த பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி, பேட்டிங் தேர்வு செய்தார்.


சூப்பர் ஜோடி:பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட், கம்ரான் அக்மல் ஜோடி அபார துவக்கம் தந்தது. வங்கதேச பந்து வீச்சை விளாசித் தள்ளிய இந்த ஜோடி, விரைவாக ரன்கள் குவித்தது. "டுவென்டி-20' அரங்கில் கம்ரான் 4, சல்மான் பட் 2 வது அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாகிப் சுழலில் கம்ரான் அவுட்டானார். கம்ரான் 73 ரன்கள் (8 பவுண்டரி, 1 சிக்சர்) சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் அப்ரிதி (9) ஏமாற்றினார். மறுமுனையில் சல்மான் பட் 73 ரன்களுக்கு (8 பவுண்டரி 2 சிக்சர்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 172 ரன்கள் குவித்தது.


அஷ்ரபுல் அதிரடி: சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி, இம்ருல் (0), தமிம் (19) விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. பின்னர் களமிறங்கிய அஷ்ரபுல் அதிரடியில் அசத்தினார். இவருக்கு சாகிப் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, ரன் வேகம் அதிகரித்தது. சாகிப் 47 ரன்களுக்கு (3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். மகமதுல்லா (0) சொதப்பினார். மறுமுனையில் அரை சதம் கடந்தார் அஷ்ரபுல். தொடர்ந்து மிரட்டிய இவர், 65 ரன்களுக்கு (3 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக, வங்கதேசத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. பின் வரிசையில் முஷ்பிகுர் (4), மொர்டசா (1) ஏமாற்ற, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 151 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் சமி 3, ஆமர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
-------


ஸ்கோர் போர்டு


பாகிஸ்தான்


கம்ரான் அக்மல் (கே) அப்துர் (ப) சாகிப் 73 (55)
சல்மான் பட் (ப) சபியுல் 73 (46)
அப்ரிதி (கே) மகமதுல்லா (ப) சாகிப் 9 (9)
அப்துல் ரசாக் -அவுட் இல்லை- 6 (5)
மிஸ்பா -அவுட் இல்லை- 8 (5)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில் 3 விக்., இழப்பு) 172
விக்கெட் வீழ்ச்சி: 1-142 (கம்ரான்), 2-156 (அப்ரிதி), 3-158 (சல்மான் பட்).
பந்து வீச்சு: மொர்டசா 4-0-39-0, அப்துர் 4-0-41-0, சபியுல் 4-0-25-1, நயீம் 2-0-18-0, சாகிப் 4-0-27-2, சுவோ 1-0-12-0, அஷ்ரபுல் 1-0-8-0.


வங்கதேசம்


தமிம் இக்பால் (கே) + (ப) ஹபீஸ் 19 (18)
இம்ருல் (கே) மிஸ்பா (ப) ஆமர் 0 (2)
அஷ்ரபுல் (கே) கம்ரான் (ப) ஆமர் 65 (49)
சாகிப் (கே) உமர் (ப) சமி 47 (31)
மகமதுல்லா (கே) ஆமர் (ப) சமி 0 (3)
நயீம் --அவுட் இல்லை- 10 (9)
முஷ்பிகர் (கே) அஜ்மல் (ப) சமி 4 (3)
மொர்டசா (ஸ்டெ) கம்ரான் (ப) அஜ்மல் 1 (3)
சுவோ -அவுட் இல்லை- 1 (3)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில் 7 விக்., இழப்பு) 151
விக்கெட் வீழ்ச்சி: 1-1 (இம்ருல்), 2-31 (தமிம்), 3-122 (சாகிப்), 4-123 (மகமதுல்லா), 5-140 (அஷ்ரபுல்), 6-145 (முஷ்பிகர்), 7-150 (மொர்டசா).
பந்து வீச்சு: ஆமர் 4-0-16-2, சமி 4-0-29-3, ஹபீஸ் 3-0-28-1, அப்துல் ரசாக் 2-0-23-0, அஜ்மல் 3-0-18-1, அப்ரிதி 4-0-37-0.

0 comments: