தமிழகத்தில் 234 தொகுதியிலும் காங்., மாநாடு; தங்கபாலு தகவல்

''தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 லோக்சபா தொகுதிகளிலும் விரைவில் காங்கிரஸ் கட்சி மாநாடு நடக்கவுள்ளது,''என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு பேசினார்.வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

தமிழக காங்., தலைவர் தங்கபாலு பேசியதாவது:காங்., கட்சிக்கு தமிழகத்தில் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கட்சியும் நல்ல வளர்ச்சியும் அடைந்துள்ளது. காங்., கட்சி பல்வேறு தியாகங்களையும், வரலாறுகளையும் படைதுள்ள கட்சி. விரைவில் 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மாநாடு நடக்கவுள்ளது.டிச., 28ம் தேதிக்கு முன் சென்னையில் காங்., தலைவர் சோனியா பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனை ஏற்படும். வேதை பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உப்பு உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் தமிழக காங்கிரஸ் கட்சி பேசி, இப்பகுதிக்கு அகல ரயில்பாதை திட்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு தங்கபாலு பேசினார்.


பனைவாரிய தலைவர் குமரி அனந்தன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாமோதரன், நாகை லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிஸ் தலைவர் பிரபு, வேதை சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய், குருகுல அறங்காவலர் கேடிலியப்பன், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் முகமது அம்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: