ரஷ்யா, சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 26 பேர் பலி; 21 பேர் காயம்

ரஷ்யாவின் கபார்டினோ - பல்கேரியா குடியரசில் நேற்று மே தினக் கொண்டாட்டத்தின் போது நடந்த குண்டு வெடிப்பில், ஒருவர் பலியானார்; 21 பேர் படுகாயம் அடைந்தனர்; ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாயினர்.ரஷ்யாவின் கபார்டினோ - பல்கேரியா குடியரசின் தலைநகரான நல்சிக், விளையாட்டுகளின் சொர்க்க பூமியாகக் கருதப்படுகிறது. இங்கு, நேற்று மே தினக் கொண்டாட்டமாக, குதிரைப் பந்தயம் நடந்து கொண்டிருந்த போது, குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார்.


இது குறித்து, அந்நாட்டு உள்துறை செய்தித் தொடர்பாளர் மரினா க்யாசோவா கூறுகையில், 'குண்டு, குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்பகுதியில் நிறைய பேரைக் காயப்படுத்தும் வகையில் நிறைய இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன; 21 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால், சரியான எண்ணிக்கை எவ்வளவு என்பது இனிமேல் தான் தெரியும்' என்று தெரிவித்தார்.சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில் உள்ள ஒரு மசூதியில், அடுத்தடுத்து நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாயினர்; நிறைய பேர் படுகாயம் அடைந்தனர்.

0 comments: